திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பாலவேடு கிராமத்தில் நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் எஸ்.வி.ஏஜென்சிஸ் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவிற்கு வருகை தந்த
முன்னாள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ப.பெஞ்சமின் மற்றும் பி.வி.ரமணா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், இணைத்தலைவர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் பாலவேடு பஞ்சாயத்து தலைவர் பிரபாவதி சிவானந்தம், ஹோட்டல் பிரதிபா பவன் உரிமையாளர் கே.சங்கர் உள்ளிட்டோர். கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.