மார்த்தாண்டம் பிப்- 9
தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட சுடுகாட்டு பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 51 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இங்கு புதிய தொழில்நுட்பத்தில் இறந்தவரின் உடல் கேஸ் மூலம் ஏரியூட்டப்படுகிறது. தகன மேடையில் கேஸ் மூலம் 6 இடங்களில் தீயூட்டப்படுகிறது.
சடங்குகள் செய்ய தனி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக தனி படித்துறை கட்டப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்க முடியாத வயதானவர்களுக்கு இதன் அருகிலேயே குளிக்க தனி அறை தண்ணீர் வசதியுடன் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதி முழுவதும் இன்டர்லாக் மூலம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது சுமார் 100 மீட்டர் தூரம் உறுதியான காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது
குறிப்பாக எரியூட்டப்பட்ட பிறகு புகை இந்த பகுதியில் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 30 அடி உயர புகை போக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு அமிர்தவனம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நவீன எரிவாயு தகன மேடையை குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைத்தம்பி குத்து விளக்கேற்றி நேற்று திறந்து வைத்தார். நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், இன்ஜினியர் குறள் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அதிகாரி ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்