சங்கரன்கோவிலில் கால்நடை மருத்துவ வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி
கலெக்டர் கமல் கிஷோர், எம்பி ராணி ஶ்ரீ குமார், எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 2 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகனங்களை கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் வகையில் இந்த வாகன சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர்(கூ.பொ)ரிச்சர்டு ராஜ், திருநெல்வேலி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுமதி, உதவி இயக்குநர்கள் திருநாவுக்கரசு, ரஹ்மத்துல்லா, முருகன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், துணைத் தலைவர் செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், துணைத் தலைவர் மகேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் அந்தோணி ராஜ், நாகராஜன், வசந்தா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.