தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நான்கு புதிய பேருந்துகள் துவக்க விழா
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா மற்றும் திருநெல்வேலிக்கு நான்கு புதிய பேருந்துகளை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன்,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர்,திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி,சுரண்டை நகரத் திமுக பொறுப்பாளர் கணேசன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்