திண்டுக்கல் ஜூன்:11
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி மு.ரெ.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு மையம் தொடக்கவிழா நிகழ்ச்சி
நடைபெற்றது. இவ்விழா கன்னிவாடி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி சண்முகம் மற்றும் துணைத்தலைவர் எல்.முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
பள்ளித் தலைமையாசிரியர் மகேஸ்வரி மற்றும் வட்டார வளமைய பொறுப்பு அலுவலர் மேகலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் வட்டா வளமைய எமிஸ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் எல்காட் நிறுவனத்திலிருந்து சசிகலா ஆகியோர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.