ஈரோடு பிப் 24
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் தயாரிக்கப்படும் கைத்தறி துணிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அரசு சீருடை திட்டங்கள், துண்டுகள், மேட், வேட்டிகள், சட்டைத்துணிகள், தலையனை உறைகள், ஏற்றுமதி இரகங்கள், திரைச்சீலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் சங்கத்தின் ஜவுளிகள் தலைமை விற்பனை நிலையம், கோ-ஆப்டெக்ஸ், கிளை விற்பனை நிலையம், லூம் வோல்டு, முகவர் விற்பனை நிலையம், அரசு கண்காட்சி மற்றும் தனியார் கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.87.24 இலட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகிறது. சங்கத்திற்கு தேவையான நூல்கள் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், அரசு நூல் கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திடம் கைத்தறி மற்றும் துணி நூல் துறையிடம் அனுமதி பெற்று கொள்முதல் செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, தறி குடோனில் நெசவு மற்றும் தார்சுற்றி வரும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.