கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மாத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி முன்னாளீ தலைவரும், காங்கிரஸ் வட்டார தலைவரும் ஆன மாது அவர்கள் உயிரிழந்ததை அடுத்து, முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட எம்பி செல்வகுமார் அவர்கள் அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதேபோல், ஊத்தங்கரை அடுத்த ஆசிரியர் நகரில் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் அணி மாநில தலைவியின் மகன் மதன்குமார் இறந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் அவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். முன்னாள் எம்பி செல்வகுமாரும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த இழப்பில் துயருற்ற குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.