கடையநல்லூர் டிச 13
கடையநல்லூரில் திறந்தவெளிகளில் மலம் கழிக்கப்படவில்லை என்பதை நகராட்சி சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என பொது நல அமைப்புகள் எதிர்பார்ப்பு.
கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தின் பரப்பளவில் அதிக விஸ்தீரணம் கொண்ட பெரிய நகர சபையாகும் அந்த வகையில் 33 வார்டுகளை கொண்ட இப்பகுதி குறிப்பாக குமந்தாபுரம், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால் ,பேட்டை, இக்பால் நகர், மேலக்கடைய நல்லூர், இந்திரா நகர் , என அழைக்கப்பட்டு வரும் பகுதிகளில் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர் இதே போல் சுமார் 25,000 மேற்பட்ட குடியிருப்புகளும் இங்கு உள்ளது இந்த நிலையில் இந்த மக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகள் கழிவு நீர் வாய்க்கால்கள் சாலை வசதிகள் தெருவிளக்கு வசதிகள் மழை நீர் வடிகால்கள் யாவும் சீரற்ற நிலையில் சரியான கட்டமைப்புகள் இல்லாமல் உள்ளது கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற மத்திய மாநில நிதிகளைக் கொண்டு உள்ளபடியே அப்போது இருந்த நிர்வாக அதிகாரிகளும் சரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சரி சுகாதாரத்துறை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத சூழலிலும் திறந்து வெளிகளில் மல,
ஜலம் கழிப்பதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஒவ்வொரு பகுதிகளுக்கும் தண்ணீர் வசதியுடன் கூடிய இலவச கழிவறைகளை கட்டமைத்தனர் ஆனால் அதன் பின்னால் வந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சரி அரசு அதிகாரிகளும் சரி அதை விஸ்திரிக்கவோ , அதை பராமரிக்கவோ, ஏரெடுத்துக் கூட பார்க்கவில்லை அதே நேரம் அந்த இலவச கழிப்பறைகளில் பலர் பெரும்பான்மை சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பல இடங்களில் நகராட்சி நிர்வாகம் நிர்ணயிக்காத கட்டணத்தை அதாவது சிறுநீர் கழிக்க 5 ரூபாய் மலம் கழிக்க பத்து ரூபாய் என வசூலித்து வருகின்றனர் .. இப்படி தனி நபர்கள் கல்லா கட்டுவதால் அதற்கு பணம் கட்ட கூட வசதி இல்லாத வீடுகளில் கழிவறையில் வசதிகள் இல்லாத பெரும்பாலானோர் குறிப்பாக கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர் அதேபோல் அட்ட குழம்பு பகுதியில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் பாதையிலும் தேசிய நெடுஞ்சாலையிலே இரு பக்கமும் மல ஜலம் கழித்து வருகின்றனர் இதே போல் கிருஷ்ணாபுரம் பகுதிகளிலும் பேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மலஜலம் கழித்து வருகின்றனர் இதனால் சுகாதாரக் கேடுகள் அனு தினமும் பெருகி வருகிறது மேலும் சில பகுதிகளில் சமூக விரோதிகள் மற்றும் போதை ஆசாமிகளின் கூடாரமாக அந்த இலவச கழிவறைகள் பயன்பட்டு வருகிறது குறிப்பாக கிருஷ்ணாபுரம் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மகளிர் இலவச கழிப்பறை பூட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது இதுவரை பெண்கள் பயன்பாட்டிற்கு இந்த நகர சபை நிர்வாகமும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் சரி, இதுவரை பெண்கள் பயன்பாட்டிற்காக அதை திறப்பதற்கான எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை
கடையநல்லூர் நகர சபை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் எதைப் பற்றியும் கவலை கொள்வதாக தெரியவில்லை இது குறித்து பலமுறை நினைவூட்டல்கள் குறும் செய்திகள் பத்திரிகை செய்திகள் மூலம் தெரிவித்தாலும் ஏனோ? சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதை பொறுப்புடன் கண்காணிக்க வேண்டிய ஆணையரும், இவர்கள் இருவரையும் கண்காணித்து மக்கள் நலனை பேணுவதாக கூறி வருகின்ற நகர் மன்ற தலைவரும் மனசாட்சியே இல்லாமல் வேலை மிக மிக மோசமான அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர் குறிப்பாக அப்பகுதியில் மேற்கொள்ளும் தனியார் துப்புரவு தொழிலாளிகளை வைத்து சம்பந்தப்பட்ட கோரிக்கை வைத்த நபர்களை சந்தித்து விரைவில் பணிகளை மேற்கொள்கிறோம் என்று தகவல் சொல்லச் சொல்கின்றனர் அப்படி கூறியும் சமீபமாக ஒன்னரை மாத காலம் ஆகிவிட்டது ஆனால் ஏனோ? அந்த ஸ்ரீ விசாலாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் இருக்கின்ற மகளிர் இலவச கழிவறையை திறந்து பெண்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க நகரசபை நிர்வாகம் முன் வரவில்லை எனவே இதுகுறித்து விரைவில் நீதிமன்ற மூலம் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மகளிர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன..