மயிலாடுதுறை.22
குத்தாலத்தில் வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர், விவசாய நிலங்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி, அத்தொகையை முன் தேதியிட்டு செலுத்த நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இப்பகுதி மக்கள் பலர் பல தலைமுறைகளாக குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும் வருகின்றனர். இவர்களுக்கு அதிக வாடகை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து குத்தாலம் கடைவீதியில் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வம், மாநில பொருளாளர் துரைராஜ், மாவட்ட செயலாளர் விஜய், AIKS மாவட்ட தலைவர் சிம்சன், AIKS குணசுந்தரி, மாவட்ட துணை தலைவர் தங்கப்பன், மாவட்ட இணை செயலாளர் மேகநாதன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் விஜயா, அவையாம்பாள்புரம் குடியிருப்போர் நல சங்கம் தலைவர் கணேசன், மற்றும் பக்கிரிசாமி, மூர்த்தி, ஜீவானந்தம், விஷ்ணுகுமார், அமிர்தலிங்கம், உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஏராளமானோர் கொண்டனர்.