[11:32 am, 19/11/2024] +91 96777 06646: நீலகிரி. நவ. 20.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் சட்டப்பிரிவு 17ன் கீழ் வரையறுக்கப்பட்ட நிலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விவசாயிகள் வசிக்கின்றனர். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட இந்த நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கவும் வீடு கட்ட தளவாடப் பொருட்களை எடுத்து செல்லவும் தடையும், மின் வசதி வழங்க தடையும் நீண்ட காலமாக உள்ளது. சட்டப்பிரிவுக்கு உட்பட்ட நிலத்தில் 4.939 ஏக்கரில் 10,052 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 6,558 பேர் ஒரு ஏக்கருக்கும் குறைவாக கைவச நிலம் வைத்து தேயிலை, மிளகு, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், காப்பி போன்ற பயிர்களை விளைவித்து வருகின்றனர். சட்டப்பிரிவு நிலத்தில் வசிக்கின்ற விவசாயிகள் சங்கம் அமைத்து ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலத்தில் வாழும் மக்களின் கைவசம் நிலத்திற்கு உரிமை ஆவணமும், வீடுகளுக்கு பட்டா வழங்கவும் கோரி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். நீண்ட காலமாக தொடரும் நிலப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், பொது மக்களின் கோரிக்கை படி 10 ஆயிரத்து 552 குடும்பங்களுக்கு மின் இணைப்பு விவசாயிகளுக்கு பட்டாவும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
[11:32 am, 19/11/2024] +91 96777 06646: ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவும் 16 ஏ பிரிவின் கீழ் விவசாய நிலத்தை வனமாக மாற்றும். அரசாணையை திரும்ப பெற வேண்டும் எனவும் வனவிலங்குகள் ஊருக்குள்ள வந்து விவசாய பயிர்களை அழிப்பதை தடுக்கவும் மனித விலங்கு மோதலை தடுத்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூடலூர் தொகுதி மக்கள் கோரி வருகின்றனர். மேலும் சட்டப்பிரிவு 17 நிலத்தில் உள்ள தேயிலை விவசாயிகளுக்கு மானிய சலுகைகள் வழங்க வேண்டும் என கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் உறுதியளித்தனர். விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க 20/9/2013, 22 .10 .2013 தேதிகளில் தேயிலை வாரியத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து வனத்துறை சார்பில் தேயிலை வாரியத்திற்கு கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில் தேயிலை வாரியம் விவசாயிகளுக்கு வழங்கிய மானிய உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக தடை செய்துள்ளது. எனவே தடையை விலக்கி வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வனத்துறை குறைதீர் கூட்டத்தில் கூடலூர் சிறு தேயிலை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தலைவர் சளிவயல் ஷாஜி, மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்தராஜா, மனோகரன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
[11:32 am, 19/11/2024] +91 96777 06646: கடந்த 2022 ஆம் ஆண்டு கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சியில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி. ஆ. ராசாவும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் ஆறு மாதத்தில் பட்டா வழங்கவும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் ஆய்வுக் குழு அமைத்து சில பகுதிகளை மட்டும் ஆய்வு செய்து சென்ற பின்பும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர். யானை மனித விலங்கு மோதலால் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு இழப்பீடு உதவியாக ரூ. 10 லட்சமும், அவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்க இப்பகுதி மக்கள் அரசின் கவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போதைய தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி படி சட்டப்பிரிவு 17 நிலத்தில் வசிப்போரின் அடிப்படை உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.