சென்னை பெருநகரம்
மாநகராட்சி மண்டலம்-15-ல்
மாதாந்திர ஆலோசனை கூட்டம்
மண்டலக் குழுத் தலைவர் மற்றும் 192 வது வட்ட மாமன்ற உறுப்பினர் வி.இ.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து மண்டல குழுத் தலைவர் வி.இ.மதியழகன் மழைக்காலம் நெருங்கி வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.