தஞ்சாவூர் பிப்.6.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் அருகே காவிரி, குடமுருட்டி ,வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. எனவே இந்த ஊருக்கு திருவையாறு (திரு ஐ ஆறு)என பெயர் ஏற்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.ஐயாரப்பருக்கு 5 ஆறுகளின் நீரால் அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.
ஐயாறப்பர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அறம் வளர்த்த நாயகி அம்மன். எம பயத்தை நீக்கி அருளும் ஆட் கொண்டாருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சிவபெருமான் அப்பருக்கு கைலாய காட்சி அருளிய தலம் ஐயாறப்பர் கோயில் ஆகும். எனவே திருவை யாறு தென்கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட ஐயறப்பர் கோவிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது அதன் பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு விழாவிற் கான யாக பூஜைகள் செய்வதற் காக 92 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்க ப்பட்டது .கடந்த மாதம் ஜனவரி 26 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை யுடன் விழா தொடங்கியது. 30ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்து வந்தன
யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு கோவிலி ல் கோபுர விமான கலசங்களில் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடந்தது அதைத் தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது.
விழாவில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் மடம் இளவரசு சுவாமிகள், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், உமையொருபாக ஆதியின இளவரசு, கோவை காமாட்சிபுரி ஆதீனம், சைலாபுரிஆதீனம், புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் சரவணன் மற்றும் திரறான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ராஜாராம் உத்தரபின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் கள் அருள்மொழி அரசு, முருகவேல், ராஜு மற்றும் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்