நாகர்கோவில் செப் 14
அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில், வடசேரியில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், வடசேரியில் அமைந்துள்ள அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.