தஞ்சாவூர். அக்.4
அனைத்து நிலைகளிலும் முன்னேற்ற பாதையில் தஞ்சாவூரை கொண்டு செல்ல துணையாக நிற்பேன் என அமைச்சர் கோவி. செழியன் கூறினார்
தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி. செழியன் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பூங்கோத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கோவி. செழியன் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம், கல்யாணசுந்தரம் எம்.பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் அன்பழகன், டி கே ஜி நீலமேகம், அண்ணாத்துரை ,அசோக்குமார் மேயர் சண். ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் அனைத்து உயர் அதிகாரி கள் சந்திப்பு நடைபெற்றது பின்னர் அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு க்கு இணங்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக, தஞ்சாவூர் மாவட்டத்தின் பிரதிநிதி யாக என்னை நியமித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூகநீதி ஆட்சி நடக்கின்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயர்கல்வித்துறைக்கு பட்டியலின த்தை சேர்ந்த எளியவன், ஓலைக் குடிசையில் பிறந்த ஏழைத் தொண்டனை நியமித்து இருப்பது தமிழக மட்டுமல்ல, இந்தியாவே உற்று நோக்குகிறது.
வார்த்தையில் சொல்லுவது வேறு செயலில் செய்வது வேறு என்ற நிலையை மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நினைத்தாரோ அதை வார்த்தை யில் சொன்னார். வார்த்தையில் என்ன நினைத்தாரோ அதை சட்டத்தின் மூலம் செய்து காட்ட முடியும் என என்னை உயர்கல்வி அமைச்சராக நியமித்திருக்கிறார் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் ஆகும். கருணாநிதியின் தாய்மண் இந்த தஞ்சாவூர். நான் டெல்டாகாரன் என்று பேசக்கூடிய ஸ்டாலினின் தாய் மண். வருங்கால தமிழகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாத்தா கருணாநிதி, தந்தை ஸ்டாலின் ஆகியோரது தாய்மண் என்ற நிலையில் ,அவர் தான் இந்த மண்ணின் மைந்தர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முழு வளர்ச்சிக்கும் மாவட்ட ஆட்சி தலைவர், அனைத்து எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்போடு, கருத்துகளை ஏற்று அனைத்து நிலையிலும், தஞ்சாவூர் மாவட்டத்தை முதன்மை யான மாவட்டமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணையாக இருப்பேன். தமிழக முதலமைச்சரின் அனைத்து திட்டங் களும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதலாவதாக வந்தது என்ற புதிய அத்தியாயத்தை தொடங்குவது தான் எனது தலையாய கடமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்