நாகர்கோவில் – டிச: 08,
கன்னியாகுமரி மாவட்டம்
தோவாளை தாலுகா திடல் பகுதியில் காட்டு யானை கூட்டம் புகுந்து தென்னை. வாழை உட்பட விவசாய பயிர் களை அழித்துள்ளது . அந்த இடத்தின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தின் மாவட்ட செயலாளர் ஆர். ரவி. மாவட்ட தலைவர் எஸ். ஆர். சேகர். கடையாலுமூடு பேரூராட்சி தலைவர் ஜூலியட். சக்தி வேல். தங்கம். கருணாநிதி உள்ளிட்டோர் இடத்தை பார்வையிட்டனர்.
தமிழக அரசு மற்றும் வனத்துறை அழிந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு காலதாமதம் செய்யாமல் வழங்க பட வேண்டும். யானைகள் வராமல் இருக்க அகழிகள் உடனடியாக அமைக்க பட வேண்டும்
யானை வரும் வழி தடத்தில் காணப்படும் பாலத்தை பொதுப்பணித்துறை உடனடியாக உடைக்க வேண்டும். பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்பீடு க்கு நிவாரணம் வழங்க வேண்டும். பன்றிகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசையும . வனத்துறை யையும் தமிழ் நாடு விவசாயிகள் சங்க த்தின் குமரி மாவட்ட குழு சார்பில் கேட்டு கொள்கிறோம்.