சிவகாசி- ஜன 25
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலகு மற்றும் “அன்பால் இணைவோம் “அறக்கட்டளை சார்பாக பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 1098 குறித்த உலக சாதனை நிகழ்வு சிவகாசியில் உள்ள S.H.N.V பெண்கள் பள்ளியில் இன்று நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 1098 எண் வடிவில் நின்றுவிழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்,சார்பு
ஆட்சியர் பிரியா, சிவகாசி டி.எஸ்.பி பாஸ்கர் , மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டை அறக்கட்டளை நிறுவனர் சதீஸ்குமார் செய்திருந்தார்.