நாகர்கோவில் ஜூன் 21
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாவை முதல் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.