மதுரை
திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் செயலாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் தங்க வைக்கப்பட்டனர் .
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கணேசன்,
திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா மற்றும் காவல்துறை உதவி ஆணையர்கள் சீதாராமன், குருசாமி சண்முகம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் படாததால் போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இதனைக் கண்டித்து திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா, பள்ளிவாசலில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பள்ளிவாசலில் அவசர கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் களைய மறுத்ததால் எட்டு பேரை காவல்துறையினர். கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதனால் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் கூறுகையில் ராஜபாளையத்தில் உள்ள மலப்பட்டியை சேர்ந்த சையது அபுதாகிர் என்பவர் தனது குடும்பத்திருடன் சேர்ந்து கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்த ஆடு வெட்டுவதற்காக வந்திருந்தவர்களை
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஆடு, கோழி பலியிடக் கூடாது எனக் கூறி என தடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆர்டர் காப்பி ஏதேனும் உள்ளதா என நாங்கள் கேட்டதற்கு காவல்துறையினர் அது தொடர்பான எந்த ஆவனமும் தரவில்லை மேலும் சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையை வைத்து சில அரசியல் நடைபெறுகிறது.
இந்த நிலையில்
1920 இல் லண்டனில் நடைபெற்ற வழக்கின் போது இந்த மலை எங்களுக்கு என தீர்ப்பளிக்கப்பட்டது.
இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம் நாகூர் கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதனால்
ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா என தெரியவில்லை திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் தார்களையும் அழைக்க உள்ளோம்
என்று கூறினார்.