சென்னை, அக்டோபர்- 08, எச்.சி.எல் , சைக்ளத்தான சென்னை 2024 விழிப்புணர்வு போட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது..
இப்போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசுடன் இணைந்து, இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் (சி.எஃப்.ஐ) எச்.சிஎல் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு,
பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு ரூ.33.6 பரிசுகளை வென்றனர்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (சிஎஃப்ஐ) துணைச்செயலாளர் வி .என் .சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யா மிஸ்ரா, “சென்னையின் விளையாட்டு நாட்காட்டியில் எச்.சி.எல் சைக்ளத்தான் ஒரு முக்கிய நிகழ்வாக உறுதியாக விளங்கும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் உடற்தகுதியையும், மனதுக்கு உற்சாகத்தையும் தரும். இந்த சைக்ளத்தான் தமிழக மனித வளத்தை மேலும் வலிமையாக மாற்றும் . எச்.சி.எல் நிறுவனம் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்திட வேண்டும் என்று தெரிவித்தார்.