மதுரை பிப்ரவரி.21 மதுரை
சிந்தாமணி சுங்கச்சாவடி அருகில் உள்ள ஹானா ஜோசப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தைக்கு நரம்பியல்
மருத்துவர்கள் மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருந்த மிகச்சிக்கலான நியூரோ எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹானா ஜோசப் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அருண்குமார்.
தெரிவிக்கையில் தென் தமிழகத்தில் நரம்பியல் மற்றும் விபத்து சிகிச்சைக்களுக்கு பலராலும் பரிந்துரைக்கப்படும் முன்னணி மருத்துமனையாக ஹானா ஜோசப் மருத்துவமனை திகழ்ந்து வருகிறது.
என்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம் அதற்கு காரணம் எங்கள் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள். கொண்ட குழுவினர்கள் தான்.
இது போன்ற மிகவும் அரிதான சிகிச்சைகளில் உலக அளவில் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய அறுவை சிகிச்சைகள் கைக்குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையானது குழந்தையின் மூளை அனியுரிசம் வெடிப்பு ஏற்பட்ட இந்த குழந்தைக்கு எங்கள் மருத்துவ நிபுணர்கள் துரிதமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு
குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் புதுமையான அணுகுமுறை, வெற்றிகரமான முடிவுகள் என்பது நம் இந்திய நாட்டின் வலிமையை உலகிற்க்கு உணர்த்துவ தோடு எதிர்காலத்தில் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு எங்கள் மருத்துவமனை பெரும் நம்பிக்கையை தரும் என்று கூறினார்.
இந்த நிகழ்வின் போது மருத்துவர் விநாயகமணி மற்றும் மருத்துவக் குழுவினர்கள் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின். தலைமை சந்தை மேலாளர் சேகர் சிறப்பாக செய்திருந்தார்.