வேலூர் மே. 13
வேலூர் மாவட்டம் ,வேலூர் கொசப்பேட்டை அருள்மிகு அமிர்தலிங்க சுவாமி மடாலயத்தில் 255ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் யாகங்களும் அபிஷேகங்களும் தீபாராதனைகளும் ரங்கோன் ராமசாமி முதலியார் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.