மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விரகனூர் கிராமத்தில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் ராஜாமணி ஏற்பாட்டில் நடைபெற்ற
இக்கூட்டத்தில்
கலந்து கொண்ட கிராம மக்கள் விரகனூர் கிராமத்தில் காவேரி தண்ணீர் கூடுதலாக வழங்க வேண்டும் பாதாள சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தின் போது
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன்.
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சுகாதார அலுவலர்கள் பணியாளர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



