கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹாக்கி தலைவர் K கோவிந்தராஜ் கூறுகையில் நாகரசம்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹாக்கி அசோசியேஷன் முதலாம் ஆண்டு ஆடவர்க்கான ஹாக்கி போட்டி நடத்திக் கொண்டிருக்கிறது. இது தனிப்பட்ட முறையில் அசோசியேஷன் நடத்தும் போட்டி ஆனால் கிருஷ்ணகிரி மாவட்ட ஹாக்கி யூனிட் சார்பில் இருந்து இந்த மாவட்டத்திற்கு எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை நாகரசம்பட்டியில் மட்டும் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் இருந்தால் போதாது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உருவாக்க வேண்டும் . இதற்கு ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு(HUT) உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஹாக்கி யூனிட்டை சரி செய்ய வேண்டும் .கிருஷ்ணகிரி மாவட்ட ஹாக்கி யூனிட் தலைவராக இருப்பவரும் ஹாக்கி விளையாட்டு வீரர் அல்ல. ஹாக்கி வளர வேண்டுமென்றால் கடந்த 20 ஆண்டு காலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் செயலாளராக T ஞானசேகர் பதவி வைத்து வருவதால் கிராமங்களில் ஹாக்கி வளரவில்லை இது மாற வேண்டும். அது மாறவேண்டும் என்றால் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு உடனடியாக தலையிட்டு இந்த மாவட்டத்தில் நடைபெறும் குழப்பங்களை நீக்க வேண்டும். நாங்களும் பலமுறை மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்து விட்டோம்.சிறப்பாக செயல்பட செயற்குழுவும், பொதுக்குழுவும் தேர்தல் வைத்தும் மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும் இந்த மாவட்டத்தின் பள்ளி மாணவர்களும் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
. இந்த மாவட்டத்தில் இருக்கும் 11 அசோசியேன் ஒன்றிணைத்து ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு விற்கு உடனடியாக தெரிவித்து தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர் உடனடியாக இந்த மாவட்டத்தில் உள்ள அசோசியேசன் (KDHU)பொறுப்பாளர்களை தேர்தல் அடிப்படையில் உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்