கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 18
அரசு மகளிர் கல்லூரி பல்கலைக்கழக அளவில் சாதனை..பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கடந்த செப்டம்பர் 11 & 12 ஆகிய இரு நாட்கள் திருச்சியில் உள்ள SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் இருபதிற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற கைப்பந்து அணி மாணவிகளுக்கு கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் முனைவர் ப.நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் மற்றும் வழக்கறிஞர் ந. கண்ணன், துணை முதல்வர் முனைவர் இரா. ரதிதேவி, உடற்கல்வி இயக்குநர் க. அருள்முருகன், உடற்கல்வியியல் துறை பேராசிரியர் எ.குணா, அனைத்துத்துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் வெற்றி பெற்ற குழுவினரை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.



