மதுரை மே 15
மதுரை பண்பாடு மற்றும் வரலாறு என்ற தலைப்பில் மதுரையின் 3 அரசு கல்லூரி மாணவர்கனை தேர்வு செய்து 6 மாணவர்களை டெல்லி அழைத்து செல்லும் ரோட்டரி மிட் டவுண் நிர்வாகிகள். மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு, தொழிற்சார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த மதுரை ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை ரோட்டரி கிளப் மிட்டவுன் சார்பாக கடந்த 26 ஆம் தேதி மதுரைமீனாட்சி கலை அறிவியல் கல்லூரி திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி மேலூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மதுரையின் பண்பாடு மற்றும் வரலாறு என்ற தலைப்பு மற்றும் பறப்போம் தலைநகருக்கு என்ற தலைப்பில் வினாடி வினா மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் இரண்டு சுற்றில் தலா 12 பேர் வீதம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் ஐந்து மாணவர்கள் ஒரு மாணவர் உட்பட ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதி மாளிகை, குர்கான், மாருதி சுசுகி நிறுவனம் தொழிற்சாலை மற்றும் சில இடங்களில் தொழில் முறை பயிற்சியாக பர்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மூன்று கல்லூரிகளிலிருந்து தலா 2 மாணவர்கள் விகிதம் மொத்தம் 6 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்காக ரோட்டரி கிளப் மிட்டௌன் நிர்வாகத் தலைவர் கோமதிநாயகம் தலைமையில் மதுரை விமான நிலையம் அனைத்துவரப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் ஆறு மாணவிகள் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் 12 பேர் சேர்ந்து மொத்தம் 20 பேர் கொண்ட குழுவினர் மதுரையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்,
முன்னதாக விமான நிலையம் வந்த மாணவர்கள் தாங்கள் முதல் முறையாக விமானத்தில் செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லூரி படிப்பு முடியப்போகும் தருவாயில் இப்பயணம் அமைந்தது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை அமைத்துக் கொடுத்த ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் எங்களது கல்லூரி முதல்வர்கள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.