சிவகங்கை மே 14
நாட்டரசன்கோட்டை கண்ணனுடைய நாயகி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் இணைச் செயலாளரும் காரைக்குடி வடக்கு மண்டல அரசு போக்குவரத்து கழக துணை தலைவருமான காளையார்கோவில் எம்.மகாலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.
இதில் அதிமுக கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.