சென்னை. ஜூன் – 16,
சென்னையின் இளம் வானியலாளர்களை வசீகரிக்கும் வானியல் நிகழ்வை ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல் சார்பில் சென்னை பள்ளிக்கரணையில்”கோ காஸ்மோ – யுவர் டிக்கெட் டூ ஸ்பேஸ்” என்ற தலைப்பில் கண் கவர் வானியல் கண்காட்சியை நடத்தியது பள்ளிக்கரணையில் உள்ள ஆர்க்கிட்ஸ் வளாகத்தில் ஜூன் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது
இக்கண்காட்சி அனைவரையும் கவர்ந்திழுக்கும் கல்வி அனுபவங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் கற்றல் வாய்ப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று உள்ளது..
இதற்கு முன்பு பெங்களூர், மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இது போன்ற கண்காட்சிகளில் 25,000 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து இப்போது கோ காஸ்மோ வானியல் கண்காட்சி இப்போது சென்னையில் நடைபெற்றது.
இக்கண்காட்சி குறித்து துணைத் தலைவர் அஜித் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
விண்வெளி ஆய்வு என்பது சாகசம் மற்றும் கண்டுபிடிப்புக்கான நமது உள்ளார்ந்த விருப்பத்தை குறிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்திய விண்வெளித் துறை 33 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நாம் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இது எங்கள் பாடத்திட்டத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல், விரிவடைந்து வரும் இந்த துறையில் சிறந்து விளங்குவதற்கு தேவையான திறன்களையும் வழங்குகிறது
கோ காஸ்மோ வானியல் கண்காட்சியானது, இளம் மனங்களில் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆர்வத்தையும் வியப்பையும் தூண்டுவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்
உடன் கல்வியாளர் டாக்டர். அன்னா மரியா நோரோன்ஹா, பள்ளிக்கரணை வளாகத்தின் முதல்வர் ரஜினி சார்லஸ், பள்ளியின் கல்வியாளர் வி.பி., ஹர்ஷ் குப்தா, மற்றும் சென்னை மண்டலத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.