தஞ்சாவூர். அக்.6
தஞ்சாவூரில் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தினம் சிறப்பாக நடந்தது.
கூட்டத்திற்கு மதுரை மண்டல இணைச் செயலாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் இராஜேந்திரன் வரவேற்றோர. நோக்கவுரையை மண்டல தலைவர் கோபால்ராஜ் பேசினார்.
முன்னதாக மீனாட்சி மருத்துவ மனை மற்றும் மாக்ஸி-விஷன் கண் மருத்துவனையினர் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை நடந்தது. சிறப்பு பேச்சாளர் கவிஞர். நந்தலாலா ஓய்வு பெற்றவர்கள் தங்களது வாழ்க்கையை மிக சந்தோசமாக நடத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும், முதியோரைக் கொண்டாட வேண்டும், முதியோரைப் பாதுகாக்க வேண்டும் அது தற்கால சந்ததியினரின் கடமை என கூறினார். 80 வயதைக் கடந்த மூத்தவர் யு.கிருஷ்ணமூர்த்தி பணியினை பாராட்டி, பொன்னாடை, நினைவுபரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.. ,பொதுச்செயலாளர் ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் பொதுசெயலா ளர் புண்ணிய மூர்த்தி, மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மண்டல தலைவர் பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மீனாட்சி மருத்துவ மனையின் பொது மேலாளர் சிவக்குமார்( மார்க்கெட்டிங்)உடல் நலம் பேணுவது சம்பந்தமாகவும், வயோதிகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என உரையாற்றி னார். ஜவஹர்லால் குடும்ப ஓய்வூதியம் 30℅ ஆக உயர்வு, ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வு மற்றும் ஆயுள் காப்பீடு,சுகாதார காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி வரியை முற்றிலுமாக நீக்குதல் தீர்மானங்களை வாசித்தார். இறுதியாக மண்டல செயற்குழு உறுப்பினர் ஏ. எஸ். இராகவன் நன்றி கூறினார்