தஞ்சாவூர் செப்.9.
தஞ்சாவூர் மாவட்டத்தில்விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஏறத்தாழ 879 இடங்களில் விநாயகர் சிலைகள்.
மாவட்டத்தில் தஞ்சாவூர் திருவையாறு பூதலூர் பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி திருவோணம் வட்டங்களில் 879 இடங்களில் விநாயகர் சிலைகளை பாஜக இந்து அமைப்புகள் அமைத்துள்ள னர்.
ஒவ்வொரு சிலைக்கும் தலா 2 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏறத்தாழ 70 சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப் பட்டன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மேல வீதி கீழ வீதி வடக்கு விதி சீனிவாசபுரம் மகநோம்புசாவடி மருத்துவக் கல்லூரி பகுதி உள்ளிட்ட 85 இடங்களில் 5 அடி முதல் 10 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப் பட்டுள்ள ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் அமைத்துள்ள விநாயகர் சிலைக்கு மாமன்ற உறுப்பினர் கோபால் வழிபாடுசெய்தார்.
இந்நிகழ்ச்சியில் விழா குழு நிர்வாகிகள் விநாயகம் ஜெய்சதீஷ் ராஜேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.