நாகர்கோவில் – செப்- 02,
நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் நடைபெறும் கந்தூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபம் ஏற்ற சுவாமி தோப்பு குருமகா சன்னிதானம் பால. பிரஜாபதி அடிகளாருக்கு அழைப்பு .
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அக்டோபர் 15ந் தேதி நடை பெறும் விழாவில் கலந்து கொள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் பொட்டல்புதூர்.ஷா இனம்தார்,நடராஐன்,சுப்பையா,முருகன்,வேல்பாண்டி மற்றும் நிர்வாகிகள் சாமிதோப்பு அய்ய வைகுண்டர் அன்புவனம் வருகை தந்து பால.பிராஐபதி அடிகளார் அவர்களை சந்தித்தனர்.உடன் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி மற்றும் நிர்வாகிகள்.



