களியக்காவிளை, அக் – 5
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு கிராமம் காலனி பகுதியில்,
இரணியல் சர்வோதய வளாகத்தில் அமைந்திருந்த தேச தந்தை மகாத்மாகாந்தியின் திருவுருவ சிலையை அடித்து நொறுக்கியவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டும்,
நடவடிக்கை எடுக்க விடாமல் துணைபோகும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீதும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தும், நேற்று மாலை 4 மணிக்கு கழுவன்திட்டை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்புறம் மேற்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் M.R.காந்தி, மாநில தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சஜூ கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.
மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை அணி பிரிவு நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.