தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என் ஜி ஓ காலனியில் இயங்கி வரும் ஜிவி எலும்பு மற்றும் கண் மருத்துவமனையின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஜிவி மருத்துவமனை மற்றும் புதிய பார்வை இணைந்து ஜிவி மருத்துவமனை வளாகத்தில் இலவசமாக எலும்பியல் மற்றும் கண் சிகிச்சை முகாம் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் எலும்பு முறிவு மருத்துவர்.திரு.பாலவிக்னேஷ் எம் எஸ் ஆர்த்தோ மற்றும்
கண்மருத்துவர் திருமதி.பூர்ணிமா பாலவிக்னேஷ் எம்பிபிஎஸ்., டிஓ., டிஎன்பி அவர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு எலும்பு மற்றும் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்நிகவில் புதியபார்வை தலைவர் திரு. பழனிச்செல்வம், புதிய பார்வை சேவா டிரஸ்ட் செயலாளர் எல் ஐ சி மாரியப்பன் திரு. இராமகிருஷ்ணன் ,புதியபார்வை நிர்வாகிகள், மருத்துவமனை மேலாளர் கார்த்திக் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



