தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முஸ்லீம் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு டிவிஎஸ் அறக்கட்டளை மற்றும் நெல்லை அகர்வால் மருத்துவமனை நிறுவனத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமினை ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் டிவிஎஸ். அறக்கட்டளை கள இயக்குனர் நந்தகோபால் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிச்சைமுத்து என்ற சிவா அசோக்குமார் பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவசகாயம்
டிவிஎஸ். அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் சண்முகம் முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.