வேலூர்-14
வேலூர் மாவட்டம், அனிதா மருத்துவமனை மற்றும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் இணைந்து நடத்திய குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம் கமலாட்ச்சிபுரம் அனிதா மருத்துவமனையில் நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். அனிதா, கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மகளிர் நல மருத்துவர் டாக்டர் விஸ்வஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.