மதுரை ஜூன் 23,
மதுரையில் பத்திரப்பதிவில் மோசடி – பத்திரப்பதிவு அலுவலர் சஸ்பெண்ட். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் இரவோடு இரவாக 33 வில்லங்க பத்திரங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் கீழ் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலர் பானுமதியிடம் நேரடியாக விசாரணை ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் ஏஜெண்டுகள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக இருந்த புகாரின் கீழ் பத்திரப்பதிவு அலுவலர் பானுமதியை பணியிடநீக்கம் செய்தனர். பத்திரப்பதிவு துறையில் சிறப்பாக செயல்பட்டுவரும் அமைச்சர் மூர்த்தியின் சொந்த மாவட்டமான மதுரை மாவட்டத்தில் இரவில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு மோசடியான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியில் இருந்த பத்திரப்பதிவு அலுவலர் விடுமுறையில் இருந்தபோது மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக பானுமதியை ஒரே நாளில் இடமாற்றம் செய்து அவர் மூலமாக மோசடியான பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோசடி குறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.