அரியலூர், ஆக;30
அரியலூர்மாவட்ட (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைபடி ,தலைமைப்பொறியாளர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அவர்களின் வழிகாட்டுதல் படி கண்காணிப்பு பொறியாளர் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு விழுப்புரம் ஆய்வு செய்தார், பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார் , மேலும் ஆய்வின் போது உடன் கோட்டப்பொறியாளர் (நெ), க(ம)ப, அரியலூர் , உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் செந்துறை உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்