சென்னை, ஜுன்-21,
எம் .ஜி.எம் ஹெல்த்கேர் 30 மணி நேரத்தில் தொடர்ச்சியாக இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை புரிந்திருக்கிறது.
இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர். கே.ஆர் பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர். கே.ஜி. சுரேஷ்ராவ் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்திருக்கின்றனர்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தின் இணை இயக்குநர் டாக்டர். கேஜி சுரேஷ் ராவ் பேசுகையில், முதலாவதாக மே 25 அன்று 60 வயதுள்ள . சுரேந்திர குமாருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவமனையில் இருந்து உயிரிழந்த தானம் அளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட இதயமானது பிற்பகல் 1:10 மணியளவில் அவரிடமிருந்து சேகரிக்கப்பட்டு பிற்பகல் 1:50 மணியளவில் எம்ஜிஎம்.கொண்டு வரப்பட்டது. இரண்டாவதாக 2024 மே 25 அன்று 50 வயதான ராதாகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த தானம் அளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட இதயமானது இரவு 10:52 மணியளவில் சேகரிக்கப்பட்டு இரவு 11:05 மணியளவில் எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு கொண்டுவரப்பட்டு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது 2024 மே 25 அன்று 67 வயதான திரு. சைலேஷ்-க்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருபுற நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட நுரையீரல்கள் இரவு 10:52 மணியளவில் சேகரிக்கப்பட்டு இரவு 11:05 மணியளவில் எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு கொண்டுவரப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது (மேற்குறிப்பிடப்பட்ட அதே தானமளிப்பவரிடமிருந்து). நான்காவதாக 2024 மே 26 அன்று 40 வயதான திரு. முகமது அஸ்லாமுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட இதயமானது காலை 11:44 மணியளவில் சேகரிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு உடனடியாகவே அவருக்கு இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.
ஐந்தாவதாக 2024 மே 26 அன்று 50 வயதான நித்திஷ் சிங் என்பவருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த தானமளிப்பவரிடமிருந்து பிற்பகல் 2:45 மணியளவில் சேகரிக்கப்பட்டு விமானத்தின் மூலம் கோவையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு வரவழைக்கப்பட்டு எம்.ஜி. எம் மருத்துவமனையில் 5.20 மணிக்கு இதய உறுப்பு பொருத்தும் சிகிச்சை நடைபெற்றது என்று அவர் விவரித்தார்.