சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கானொலி காட்சி (ஆஃப்லைன்) வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சி பகுதியில் ரூ.5 கோடி 19 இலட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கைகளுடன் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள ”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்து, சிறப்பித்தார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் எஸ்.சரோஜா, இளநிலை பொறியாளர் பாண்டியராஜன், ஒப்பந்ததாரர் ஏ.டி.என். செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



