குலசேகரம், மார்- 4
கடையாலுமூடு அடுத்த மூக்கரக்கல் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (57). இவர் குலசேகரம் பகுதி காவஸ்தலத்தில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த சோதனை சாவடியில் ஒருவர் மட்டுமே பணியில் ஈடுபடுவர். அப்படி நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த செல்லப்பன் இரவு முழுவதும் பணியில் இருந்தார்.
இன்று 3-ம் தேதி காலை வேறொருவர் பணிக்கு சோதனை சாவடிக்கு வந்தார். அப்போது சோதனை சாவடி திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது செல்லப்பனை காணவில்லை. இதை அடுத்து கழிவறைக்கு சென்ற போது அங்கு உடலில் காயங்களுடன் செல்லப்பன் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவர் குலசேகரன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லப்பனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இரவில் உணவு சாப்பிடுவதற்கும் முன்பு கழிவறைக்கு சென்று செல்லப்பன் அங்கு தவறி விழுந்து தலையில் பழுத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.