பூதப்பாண்டி – நவ -04 –
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள கீரிப்பாறை,வாழையத்து வயல்,தடிகாரன்கோணம்,காளிகேசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது, இதனால் காளிகேசம் ஆற்று பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் குமரி மாவட்டத்தில் கன மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு செய்த்துள்ளதனால் காளிகேசம் வன சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.