கோவை மே :29
கோவை காளப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் பழனி அம்மாள் என்பவரின் மகன் கருப்பசாமி வயது 25 .தனியார் பேருந்து ஓட்டுனரான இவர் கடந்த 8 ஆம் தேதி பேரூர் செட்டிபாளையம் பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்திவிட்டு இரவில் பஸ் அடியில் படுத்து உறங்கினார். மறுநாள் காலை வேறோரு ஓட்டுநர் தவறுதலாக பேருந்தை இயக்கும் போது டயர் அடியில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில் இறந்த கருப்பசாமியின் குடும்பத்திற்கு உதவும் வகையில் கோவை மாவட்ட அரசு மற்றும் தனியார் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கோயம்புத்தூர் காக்கிச்சட்டை என்ற வாட்ஸ் அப் குழு மூலம் இணைந்து நிதி திரட்டி உள்ளனர்.
அவ்வாறு திரட்டப்பட் ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாக கருப்பசாமியின் தாய் தந்தையிடம் இன்று வழங்கினார்கள்.
மகன் இறந்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் தங்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.