தருமபுரி நகர அரசு போக்குவரத்து பணி மனையில் சட்ட சபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை, சிமெண்ட் தளம் மற்றும் நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன கழிப்பறையை பணியாளர்கள் பயன்பாட்டிற்கு வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது கழிப்பறையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் செல்வம், உதவி பொறியாளர் ரஞ்சிதா, பாட்டாளி போக்குவரத்து தொழிற்சங்க தருமபுரி மண்டல பொதுச்செயலாளர் ராஜா, மண்டல தலைவர் மாதப்பன், பொருளாளர் சுந்தமூர்த்தி, பாமக நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்யமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து பணியாளர் கலந்து கொண்டனர்.



