ஊத்தங்கரை, ஏப்ரல் 03: ஊத்தங்கரையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை அறிவுரையின்படி, நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வக வாகனம் வரவழைக்கப்பட்டு ஊத்தங்கரை பகுதியில் உள்ள பேக்கரி, ஹோட்டல் மற்றும் மளிகை கடை என 33 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் லட்சுமி, ரமேஷ்,சந்தோஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த
ஆய்வின் போது டீ கடை மற்றும் பேக்கரிகளில் சாயம் ஏற்றப்பட்ட டீ தூள் 3 கிலோ கண்டறியப்பட்டு அதனை அழிக்கப்பட்டது. முறையான லேபிள் விபரம் இல்லாத பிரட் பாக்கெட்டுகள், கார வகைகள், 5 கிலோ, குளிர்பானம் 50 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 3 குளிர்பானம் கண்காணிப்பு உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
பேக்கரி உணவகம் மற்றும் டீக்கடைகளில் தேயிலை தூள் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடமாடும் பகுப்பாய்வகத்தில் பரிசோதிக்கப் பட்டுள்ளது.
அந்த வகையில் 7 உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து உணவு வணிகர்களுக்கு ரூ. 1,000 முதல் 5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடைசெய்யப் பட்ட புகையிலை பொருள் மற்றும் கலப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் அப் எண். 9444042322 புகார் அளிக்கலாம். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும். உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புத் துறை மூலம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஊத்தங்கரையில் உணவு துறை திடிர் ஆய்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics