மதுரை நவம்பர் 9,
மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுத் தெருவில் பாதாள சாக்கடைக்கான இறுதி கட்ட பணி நடைபெறுவதை, 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன் பார்வையிட்டு விரைந்து முடிக்க கூறினார். மேலும் இப்பணி முடிந்தவுடன் தொடர்ந்து வாட்டர் லைன் மற்றும் சாலை பணிகள் தொடங்க மதுரை மாநகராட்சி மேயர் உத்தரவிட்டு உள்ளதாக 31 வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் கூறினார்.