திருப்பத்தூர்
மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டார்.
திருப்பத்தூர்:ஜன:07, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2024 அக்டோபர் மாதம் 29 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஜனவரி 1, 2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர் வாக்காளர் பட்டியல் இடம்பெறாதோர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக 2024 அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது . வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 19,201 பெயர் சேர்த்தல் படிவங்கள் 5564 பெயர் நீக்கல் படிவங்களும் 7,974 பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் படிவங்களும் என மொத்தமாக 32 ஆயிரத்து 739 படிவங்கள் திருத்த படிவங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 2025-ன் படி இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 4,83,814 ஆண் வாக்காளர்களும் 5 லட்சத்து 2827 பெண் வாக்காளர்களும் 155 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தமாக 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளர்களுடன் இறுதிப்பட்டியில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் , நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பதிவு செய்து கொள்ள தேர்தல் ஆணைய இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கு பெற்றனர்.