மார்த்தாண்டம், ஜூன் – 3.
மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கொத்தனாருக்கு மனைவி, மகன், ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோர் உள்ளனர். தாய் கருங்கல் பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய் தனது மகள் அழுது கொண்டிருப்பதை பார்த்து இது குறித்து அவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது மகன் வெளியில் சென்ற நேரத்தில், தனியாக இருந்த மகளிடம் தந்தை தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் மகளிடம் தொடர்ந்து விசாரித்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது இதுபோன்று தந்தை தனியாக வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.