மயிலாடுதுறை.28
மயிலாடுதுறையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி நடத்தினர்:-
மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக விவசாயம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி கார் ஆட்டோ இருசக்கர வாகன டிராக்டர் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் காவேரி நகரில் துவங்கிய பேரணியை ஆத்தூர் இயற்கை விவசாயி எஸ்.ஹெச்.எம் நூருல் அமீன் துவங்கி வைத்தார். இந்த பேரணியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் உற்பத்தி செய்யும் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து (C2+50) குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து கொள்முதலை உத்தரவாதம் செய்ய வேண்டும், கார்ப்பரேட் முதலாளிகள் வங்கி கடன் ரூபாய் 18 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த மத்திய அரசு விவசாயிகளின் கடனை ஒரே ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றியமைத்து தனியார் நிறுவனங்கள் கொள்ளையை தடுத்திட அரசே ஏற்று நடத்த வேண்டும், மின்சாரத்தை தனியார் மயமாக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பல விவசாயிகள் கண்டன உரையாற்றினர்.
அப்போது தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட தலைவர் வீரராஜ், மாவட்ட செயலாளர் சிவராமன், ஏ ஐ.கே.எஸ் மாவட்ட தலைவர் சிம்சன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் பால்ராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் முருகன், எல்டியூசி மாவட்ட செயலாளர் வீரச்செல்வன், ஏஐகேஎஸ் குணசுந்தரி, வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் வாணிதாஸ், த.வி.பா.சங்கம் மாவட்ட தலைவர் பண்டேரிநாதன், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைவர் ரவி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் காமராஜ், காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு ராஜேஷ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.