சுசீந்திரம்.பிப்.1
சுசீந்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் தலைமை தாங்கினார். எஸ் எஸ் ஐ கள் சந்திரசேகர், துரை, பால்பாண்டி, பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் கலந்து கொண்டு ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். தலைமை காவலர்கள் சுடர்மாதவன், மணிகண்டன், எட்வின் ஞானசேகர், சரவணன், அடல்ப், பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.