ஈரோடு, ஜன. 1 –
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் விடுதலை வேங்கைகள் கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க நாள் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள் ஆகியவற்றையொட்டி விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தமிழின்பன் தலைமையில் நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வீரமுத்து வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: விடுதலை வேங்கைகள் கட்சியின் எட்டு ஆண்டுகால போராட்ட கோரிக்கையை ஏற்று ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் முழு உருவ வெண்கல சிலையும் பல்நோக்கு நினைவரங்கமும் அமைத்து திறந்து வைத்த முதல்வர் மு க ஸ்டாலின் முன் நின்று செயல்படுத்திய அமைச்சர் சு முத்துசாமி மற்றும் அமைச்சர்கள் எ. வ. வேலு மு.பெ. சாமிநாதன் மதிவேந்தன் மற்றும் எம் பி எம் எல் ஏ நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் 14 தொகுதிகளில் அருந்ததியர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.
தீண்டாமை வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர்களுக்கு விவசாய நிலம். தொழில் தொடங்க கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும். அருந்ததியர் நல வாரியம், தாட்கோ வங்கி, உள் இட ஒதுக்கீடு கண்காணிப்பு குழு ஆகியவற்றை அமைத்திட வேண்டும். அருந்ததியர் பகுதிகளில் மிக மோசமாக உள்ள சாலை சாக்கடை கழிப்பிடம் சமூக கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக சீர் செய்து மேம்படுத்தி முற்போக்கு நூல்கள் கொண்ட நூலகம் அமைத்துத் தர வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோவில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். வடக்கு மாவட்டங்களில் அதிகமாக உள்ள தனித்தொகுதிகளில் ஒன்றைக் குறைத்து கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும். வருகிற பிப்ரவரி இறுதியில் விடுதலை வேங்கைகள் கட்சியின் சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்துவது வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் நவ்ஷாத் நிதி, செயலாளர் சௌந்தர்ராஜன், மாநில இளைஞரணி அமைப்பாளர் முஸ்தபா, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜன், ஈரோடு மாநகர தலைவர் நடராசு, பொருளாளர் மயில்சாமி, மண்டல செயலாளர் குருசாமி, மகளிர் அணி செயலாளர் ராம பிள்ளை, திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், கரூர் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர மன்ற நிர்வாகி பழனிச்சாமி கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



