ஈரோடு பிப் 1
ஈரோடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் செயலாளர் ஜீவா தங்க வேல் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில்
போலீசார் அச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்துள்ளார்கள்.
இது சம்பந்தமான செய்தியை அனைத்து பத்திரிகைகளும், காட்சி ஊடகத்திலும் செய்தியாக வெளியிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விவரங்களை சிலர் செய்தியாக வெளியிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை கண்டிக்கத்தக்கதுதான்.
அதே நேரம் விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை கட்டாயப்படுத்தி போலீசார் வாங்கி இருப்பதும்
அதை திரும்ப ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் ஒருவகையில் மனித உரிமை மீறல் ஆகும்.
ஊடகம், பத்திரிகை துறை என்பது சமூகத்தின் நான்காவது தூண்.
இதை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
செய்தியாளர்கள் மீது எவ்வகையான துன்புறுத்தலையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிமன்றம் செய்தியாளர்களின் செல்போன்களை பறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு காவல் துறையின் செயல்பாடு இருப்பது ஒரு தவறான முன்னுதாரணம்.
செய்தியாளர்களின் செல்போன்களை உடனே திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
செய்தியாளர்களை குற்ற மனப்பான்மை உள்ளவர்கள் போல் சமூகத்தில் காவல்துறை காட்டுவது தவறு.
காவல்துறையின் இத்தகைய செயல்பாடுகளுக்கு
ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.